Saturday, June 11, 2011

ஜுன் 10 வட்டியில்லா கடன் திட்ட தொடக்க விழா – ஸ்பெஷல் ரிப்போர்ட்


மிர்காப் : அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிவாவின் வட்டியில்லா கடன் திட்ட தொடக்க விழாவும் மூன்றாம் கூட்டமும் அறிவித்திருந்த படி மிர்காபில் உள்ள மன்னு ஸல்வா ஹோட்டலில் மஃரிப் தொழுகைக்கு பின் தொடங்கியது. நிகழ்ச்சியை ஆலோசனை குழு உறுப்பினர் சகோதரர் நாசர் அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்ச்சியின் தொடக்கமாய் வாரிஸ் அஹ்மது மிஸ்பாஹி அவர்கள் வட்டி சம்பந்தமான சூரத்துல் பகராவின் வசனங்களை ஓதினார்கள்.

கிராஅத்தை தொடர்ந்து “வட்டியில்லா கடன் திட்டம் ஏன்” எனும் தலைப்பில் நிவாவின் செயலாளர் பொறியாளர் ஃபெரோஸ்கான் வட்டியில்லா கடன் திட்டம் குறித்தும், அதன் தீமைகள் குறித்தும் அதிலிருந்து விடுபடும் வழிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். வட்டி என்றால் என்ன என்றும் இன்று முஸ்லீம் சமூகத்தில் குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் வட்டி எப்படி சீட்டு, ஏலம் என்று பெண்கள் மத்தியிலும் பல்வேறு ரூபங்களில் உலா வருகிறது என்று படம் பிடித்து காட்டினார்.

அத்தியாவசிய தேவைகளுக்கு அப்பால் வீடு கட்டவும், வரதட்சணை கொடுக்கவும், ஆடம்பர திருமணம் நடத்தவும் கூட வட்டி வாங்கும் அவல நிலையை சுட்டி காட்டிய ஃபெரோஸ்கான் வட்டி வாங்குபவர்களை அல்லாஹ் பைத்தியகாரனாக மறுமையில் எழும் கோர நிலையையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளதையும் சுட்டி காட்டினார்கள். இன்று வட்டி நம்மிடையே இந்தளவு புரையோடி போனதற்கு நம்மிடையை இறையச்சமின்மை, மனிதாபமின்மை, உறவினர்களை கைவிடல், ஜகாத்தை கைவிடல் போன்ற பண்புகளே காரணம் என்பதையும் எடுத்துரைத்தார்.
நபி (ஸல்) அவர்களுக்காக உயிர் கொடுக்க தயாராக இருக்க கூடிய நாம் ஏன் அவர்களின் போதனைகளின் படி வாழ ஆசைப்பட கூடாது என்று அனைவரும் சிந்திக்கும் வண்ணம் கேள்வி எழுப்பினார். வட்டி முறையை குறிப்பாக குவைத்தில் வாழும் நெல்லிக்குப்பம் சகோதரர்கள் மத்தியில் ஒழிக்கவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியவர்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறும் முறைகள் குறித்து விளக்கினார்.
பின் மே மாதம் ஊரில் நிகழ்ச்சி நடத்த முடியாத காரணங்களையும், சமீபத்தில் ஊரில் ஏற்பட்ட தீ வைப்பு சம்பவம், கத்தி குத்து போன்றவற்றிக்கான காரணத்தையும் ஐக்கிய மஜ்லிஸின் உதவியுடன் 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் எடுத்து கூறி ஒற்றுமையாய் செயல்பட அறிவுறுத்தினார்.


பின் வட்டியில்லா கடன் உதவி திட்டத்தின் கீழ் கல்வி மற்றும் திருமண உதவி என இருவருக்கு கடன் வழங்கப்பட்டது. பிற விண்ணப்பங்கள் அடுத்த மாதம் பரீசிலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. பின் நிவாவின் பொருளாளர் சகோதரர் ஹலீல் ரஹ்மான் வரவு – செலவு கணக்கை தாக்கல் செய்தார்.
அடுத்த படியாக அதிரை பைத்துல் மாலின் சார்பில் அதன் துணை செயலாளர் நிஜாமுதீன் பாகவி வாழ்த்துரை வழங்கியதோடு இத்திட்டத்தின் அவசியத்தை எடுத்து கூறினார்கள். அவரோடு அதிரை பைத்துல்மாலின் செயலாளர் சகோ. அப்துல் கரீமும் விழாவுக்கு வருகை புரிந்தார்கள். முடிவாக சகோதரர் அப்துல் ரஹ்மான் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

Wednesday, June 8, 2011

ஜுன் 10 வட்டியில்லா கடன் திட்டம் தொடக்கம் - நிகழ்ச்சி நிரல்


இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிகிழமை (10.06.2011) மாலை 6.30 மணிக்கு மன்னு சல்வா ரெஸ்டாரெண்டில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) மாதாந்திர கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வட்டியில்லா கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் அனைத்து நெல்லிக்குப்பம் முஸ்லீம் சகோதரர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்


நிகழ்ச்சி நிரல்

தலைமை : சகோ. S.A. அஷ்ரப் அலி, ஆலோசனை குழு உறுப்பினர்
கிரா அத் : சகோ. ஜுல்பிகார், துணை செயலாளர்
வரவேற்புரை : சகோ. M.I.அஷ்ரப் அலி, ஆலோசனை குழு உறுப்பினர்
இஸ்லாமிய சிறப்புரை :வட்டியும் தர்மமும் – பொறியாளர். ஃபெரோஸ்கான்,செயலாளர்
வாழ்த்துரை : சகோ. அப்துல் கரீம், செயலாளர், அதிரை பைத்துல்மால்
               சகோ. லியாகத் அலி, துணை செயலாளர், கூணி மேடு முஸ்லீம் ஜமாத்
வட்டியில்லா கடன் பெறும் பயனாளிகள் மற்றும் ஊர் நிகழ்வுகள் : பொறியாளர். ஃபெரோஸ்கான்,செயலாளர்
வரவு - செலவு அறிக்கை தாக்கல்சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்
நன்றியுரை : சகோ. ஹாஜா சாதிக், மக்கள் தொடர்பாளர்
நிகழ்ச்சி தொகுப்பு : சகோ. நாசர், ஆலோசனை குழு உறுப்பினர்

அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது