Sunday, March 20, 2011

Safety Engineer குவைத்தின் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு உடனடி தேவை


குவைத்தில் உள்ள பிரபலமான கட்டுமான குழுமத்தை சார்ந்த நிறுவனத்திற்கு Safety Engineer உடனடியாக தேவைப்படுகிறார். பல்கலைகழக கட்டுமான திட்டத்திற்கு 10 – 15 வருடங்கள் அனுபவம் வாய்ந்த நபர் தேவை. குறைந்தது பட்டப்படிப்பும், மேலும் safety துறையில் டிப்ளமோ, நெபோஷ் முடித்திருத்தல் விரும்பத்தக்கது. தகுந்த ஊதியம் அளிக்கப்படும் இப்பதவிக்கு தகுதி உள்ளவர்கள் மாத்திரம் niwakuwait@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அல்லது fiverose@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

Tuesday, March 15, 2011

லிப்ட் டெக்னிஷியன்கள் அமீரகத்திற்கு தேவை


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கிய லிப்ட் நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் எலவேட்டர் நிறுவனம் தங்களுடைய எலவேட்டர் மற்றும் எஸ்கலேட்டர் பணிகளுக்கு (Elavator / Escalator )இன்ஸ்டாலேஷன் மற்றும் பராமரிப்பு (Installation / Maintenance) பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கிறது. அனுபவம் உள்ளவர்கள் மட்டும் தங்கள் சுய விபரத்தை (Bio – data) hr@nationalelevators.ae எனும் மின்னஞ்சலுக்கோ அல்லது +9716-5342407 எனும் எண்ணிற்கு பேக்ஸ் அனுப்பவும்.
எலக்ட்ரிகல் / எலக்ட்ரானிக்ஸ் அல்லது மெக்கானிகல் இஞ்சினியரிங்கில் டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ படித்து இருக்க முடியும். Elavator / Escalator Installation or Maintenance ல் குறைந்தது மூன்றாண்டுகள் அனுபவமுள்ளவர்கள் மட்டும் மேற்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

Saturday, March 12, 2011

சவூதிக்கு வெல்டிங் (NDT), கெமிக்கல் துறைக்கு ஆட்கள் தேவை


சவூதியில் உள்ள நிறுவனத்திற்கு கீழ்காணும் நபர்கள் வேலைக்கு தேவைப்படுகின்றனர். தகுதி உள்ளவர்கள் niwakuwait@gmail.com எனும் நம் முகவரிக்கு தங்கள் பயோ-டேட்டாவை அனுப்பவும்.
1)  NDT
technician  Level-2 (PT,MT,RT/UT)
2)  Welding Inspector
AWS - CWI / CSWIP 3.1/3.2
3)  Mechanical Testing
technician / Engineer
4)  NDT Supervisor

5)  Chemical engineer
6)  Chemical Lab  technician
7)  Geolagist
8)  Soil & concrete testing engineer

ரியாத்தில் சுகாதார அமைச்சகத்திற்கு இஞ்சினியர்கள், சூப்பர்வைசர்கள் தேவை


சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள சுகாதார அமைச்சகத்திற்கு 30 சிவில், 30 எலக்ட்ரிகல், 18 மெக்கானிகல் பொறியாளர்களும் 10 சிவில் சர்வேயர்களும், 10 எலக்ட்ரிகல், 10 சிவில், 10 மெக்கானிகல் இன்ஸ்பெக்டர்கள் தேவைப்படுகிறார்கள். தகுதி உள்ளவர்கள் alizafarkhipk@yahoo.com  எனும் முகவரிக்கு தங்கள் சுய விபரத்தையும்      ma_raja2006@hotmail.com  எனும் முகவரிக்கு சிசியும் வைத்து அனுப்பவும். மேலும் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

We need  30  Civil Engineers  30 Electrical Engineers  and  18 Mechanical Engineers  10 
Civil Surveyors ,  10  Civil Site Inspectors ,  10 Eelectrical supervisors &  10 Mechanical Supervisors  in MINISTRY OF HEALTH  IN  RIYADH SAUDI  ARABIA.
REQUIREMENT  OF MINISTRY OF HEALTH IN RIYADH  SAUDI ARABIA.

 01.       Civil Engineers       30  No.s - SAR . 8000 - 10,000/     10 Years   working Experience in building and Sewerage & Drainage System.
  02.      Project Managers (Electrical) 10   No.s - SAR.  15,000 - 20,000/  20  Years  working experience  in Building Designing.
   03.     Project Engineers (Electrical)  10 No.s  SAR .  12,000 - 15,000/     15 to 20 years working experience in building designing.
    04.        Electrical Engineers    10 No.s  SAR.    8,000 -  10,000/   10  to 12 years  Working experince in  Building  construction &        designing.
 05.         Mechanical Engineers      18 No.s           SAR .   8,000 - 10,000/-            10 to  15 years  working experince in HVAC &  building  construction .
 06.         Civil Surveyors                 10  No.s         SAR .    3000 - 3500/           10 years working experince in building  construction & sewerage draianage system
 07.         Civil Supervisors               10 No.s -          SAR.     2500 - 3000/       7to  10 years  working experince in  building  construction  &    Sewerage  drainage    systems
08.         Electrical Supervisors          10.No.s        SAR.      2500- 3000/      7 to 10  years  working  experince in building  construction &   designing experince 
   09.         Mechanical  Supervisors      10     SAR.      2500  - 3000/       7 to 10 years  working experince in  HVAC System & building construction.

Minsitry of Health provides following facilities:
 Accomodation  Free. Medical   Free. Transportation  Free.
Company  Provides Family Visa Facility to Engineers only. 
Contract Period     2 years renewable  Others terms & conditions as per Saudi  Labour Laws. 
Plz Immedialty
Send Cvs to: Email.  alizafarkhipk@yahoo.com      cc:  ma_raja2006@hotmail.com

குவைத்தில் ஏசி நிறுவனத்திற்கு போர்மேன், டெக்னிஷியன், வெல்டர்கள் தேவை


குவைத்தில் உள்ள ஏ.சி. நிறுவனம் ஒன்றுக்கு கீழ்கண்ட ஆட்கள் தேவை. தகுதி உள்ளவர்கள் najaftab@yahoo.com எனும் முகவரிக்கு தங்கள் சுய விபரத்தை அனுப்பவும்

1. ELECTRICIAN HVAC
Qualification    ITI or Relevant tradesman certificate OR Experiance with HVAC as electrician.

2. HVAC FORMAN-MECHANICAL
Qualification: DIPLOMA in HVAC OR MECHANICAL OR ITI in  HVAC

EXPERIENCE:  For Diploma Holder: IF HE IS IN KUWAIT numbers of Years are No Bar IF IN INDIA THEN 5YRSof Relevant Experience Expected
For  ITI Holder   5YRS Exp  IN KUWAIT

3. HVAC TECHNICIAN
Qualification:  Know How about HVAC JOBS,  MUST KNOW BRAZING

4. WELDERS
Experianced/Qualified WELDERS FORPIPE in all positions. With SMAW, GTAW(Argon/Tig)

CV’s Can Be forwarded to najaftab@yahoo.com

Thursday, March 10, 2011

நிவாவின் அறிமுக விழா - இருளின் ஊடே ஒரு நம்பிக்கை நட்சத்திரம்



பிப்ரவரி 4, 2011ல் ஆரம்பிக்கப்பட்ட நிவா அனைத்து உறுப்பினர்களையும் ஒன்று கூட்டி தன் அறிமுக விழாவை மார்ச் 4, 2011ல் மிர்காபில் உள்ள தஞ்சை ரெஸ்டாரெண்ட் மாடியில்  நடத்தியது. அல்ஹம்துலில்லாஹ் யாரும் எதிர்பார்க்கா விதத்தில் 86 நபர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பலருக்கும் நம்மூர் நபர்கள் குவைத்தில் இத்துணை உள்ளதையே அன்று தான் தெரிந்து கொண்டனர் என்றால் அது மிகையானதல்ல.

நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்ய முன்வந்த பின் தாவூத் கார்கோ நிறுவன உரிமையாளர்களும் ஆலோசனை குழு உறுப்பினரான சகோ. கமால் அவர்கள் தலைமை தாங்க நிகழ்ச்சி தொகுப்பாளரான நிவாவின் துணை தலைவர் சகோ. பாபு நிகழ்ச்சியை தொடங்கினார். தொடக்கமாக நிவாவின் துணை செயலாளர் சகோ. ஜுல்பிகார் இறை மறையின் இனிய வசனங்களை ஓத, அதை அழகு தமிழில் மொழிபெயர்த்தார் சகோ. ஜமீல்.



நிவாவின் ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. அஷ்ரப் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றார். அதனை தொடர்ந்து நிவாவின் தலைவர் சகோ. மன்சூர் அவர்கள் நிவா ஏன் ? எப்படி? என்ற தலைப்பில் குவைத்தில் நெல்லிக்குப்பம் சகோதரர்கள் குறைந்த வருமானத்தில் கஷ்டப்படுவதையும், சிறிய விஷயத்துக்கு எல்லாம் வட்டிக்கு போவதையும் தடுக்கவே என்று அறிமுக உரையில் கூறினார்.


அடுத்து “மீண்டும் ஒரு மதீனா” எனும் தலைப்பில் நிவாவின் செயலாளர் பொறியாளர் ஃபெரோஸ்கான் இஸ்லாமிய சிறப்புரையாற்றினார். எப்படி நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமூகம் இருந்தது என்பதை உமர் (ரலி) வாழ்விலிருந்து எடுத்து காட்டினார். உமர் ரலியின் பயம், தக்வா, ரோஷம், போன்றவற்றை சொல்லி சொர்க்கத்துக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்டும் இறுதி வேளையில் முனாபிகின்கள் பட்டியலில் தன் பெயர் உள்ளதோ என்று பயந்ததை கூறியது அனைவரையும் நெகிழ செய்தது.

மேலும் எல்லா சூழ்நிலையிலும் ஓரே மாதிரி செயல்பட்ட காலீத் பின் வலீத், சுவனம் காண ஆசைப்படும் அளவு எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவிய அம்மார் (ரலி) போன்ற ஸஹாபாக்களின் வாழ்விலிருந்து மேற்கோள் காட்டி மீண்டும் அது போன்ற மாற்றம் எல்லா மஹல்லாவிலும் ஏற்பட வேண்டும் என்றார். மேலும் பொறியாளர் ஃபெரோஸ்கான் கூறும் போது நெல்லிக்குப்பத்தை முன்மாதிரி நகரமாக மாற்ற நாம் எல்லோரும் முயல வேண்டும் என்றும் அதற்கு நமதூரில் ஒரு மாதிரி இஸ்லாமிய பள்ளி கூடம் அமைய வேண்டும் என்றும் கூறினார். அப்படி பள்ளி அமைந்தால் நம் சந்ததியர் ஏ பார் ஆப்பிள் என சொல்லாமல் ஏ பார் அல்லாஹ் என்று கூறும், நம் சந்ததியர் நம்மை விட சிறந்த சமூகமாக அமையும் என்று கூறிய போது அனைவரும் இன்ஷா அல்லாஹ் என்று கூறியது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

மேலும் நமதூரில் பைத்துல் மால் ஏற்பட்டு அனைவரிடமும் முறையாக ஜகாத்தை வசூலித்து தகுதியானவர்களிடம் கொடுத்தால் 25 வருடங்களில் ஏழ்மையை ஒழித்து விடலாம் என்றும் கூறியது யோசிக்க வைத்தது. அடுத்து நிவாவின் உடனடி திட்டங்களையும் எதிர்கால திட்டங்களையும் பகுதி பொறுப்பாளர்கள் சகோ. அப்துல் ரஹ்மான்,  சகோ. லியாகத் அலி, சகோ.உஸ்மான், மக்கள் தொடர்பாளர் லால் கான் போன்றோர் விளக்கி கூறினர்.

பின் ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. பக்ருதீன் குவைத் அரசாங்கம் வெளியிட்டுள்ள பொது மன்னிப்பு (Amnesty) அறிக்கையை வாசித்து பயன் பெற வேண்டினார். பின் இன்னொரு ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. அலாவுதீன் நெல்லிக்குப்பம் ஐக்கிய மஜ்லிஸிடமிருந்து வந்துள்ள கடிதத்தை படித்து காட்டினார். பின்னர் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் ஃபெரோஸ்கான் நிவாவின் இணையதளத்தை அறிமுகம் செய்து அதில் இனி நெல்லிக்குப்பத்தின் அனைத்து செய்திகளும் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிவாவின் பிரதிநிதிகளாக நெல்லிக்குப்பத்தில் சகோ. அஷ்ரப் அலி, சிராஜ் மற்றும் ஹுசைன் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் கூறி அனைத்து திட்டங்களையும் மீண்டும் ஒரு முறை படித்தார்
.
உடனடி திட்டங்கள்
.
1.   பைத்துல் மால் – வட்டியில்லா கடன் திட்டம்
குவைத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சகோதரர்கள் பலர் மிக குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதால் சிறு பிரச்னைக்கும் வட்டியை நோக்கி செல்கின்றனர். இந்நிலையை மாற்ற வட்டியில்லா கடன் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கண்டிப்பாக நிர்வாக குழுவில் உள்ள நிர்வாகிகளுக்கும் ஆலோசனை குழு உறுப்பினர்களும் பயன் பெற மாட்டார்கள்.
இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் அக்காமா (விசா) அடிக்க முடியா சூழல் இருந்தால் சங்கத்தில் இருந்து கடன் வாங்கலாம். அது போல் அவர்களின் ஊரில் உள்ள குடும்பத்தாரின் (தாய், தந்தை, தங்கை போன்ற உறவுகள்) மருத்துவ மற்றும் திருமண விஷயங்களுக்கு உதவி பெறலாம்). அதிகபட்சமாக 150 குவைத் திர்ஹம் வரை கடன் வழங்கப்படும். அவர்களுக்கு 2 நபர்கள் ஜாமீன் வழங்க வேண்டும். கடன் தேவைப்படுவோர் விண்ணப்பம் எழுதி பகுதி நிர்வாகி மூலமாக அல்லது நேரடியாக நிர்வாக குழுவில் உள்ளோரிடம் கொடுக்க வேண்டும். விண்ணப்பதில் 2 ஜாமீன் தாரர்களின் கையெழுத்து இடம் பெற வேண்டும். பின் நிர்வாக குழு பரீசிலித்து கடன் கொடுக்கும். கடன் கொடுத்த அடுத்த மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் 25 குவைத் திர்ஹம் வீதம் கொடுக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் லைசென்ஸ்க்குகாக விண்ணப்பிப்போரின் நிலையை அலசி case by case study ஆக முடிவு எடுக்கப்படும். இத்திட்டம் ஜூன் மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் இன்ஷா அல்லாஹ்.

2.   மரணமடைந்தோருக்கு உதவி தொகை

குவைத்தில் பணியாற்றும் நெல்லிக்குப்பம் சகோதரர்கள் யாரேனும் குவைத்தில் விபத்திலோ அல்லது சாதாரணமாகவோ மரணித்து விட்டால் யாராக இருந்தாலும் அவர்களுக்காக பொது வசூல் செய்யப்படும். எவ்வளவு தொகை வசூலாகிறதோ அது அக்குடும்பத்தினருக்கு கொடுக்கப்படும். வசூலாகும் தொகை 25,000 இந்திய ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பைத்துல்மாலிலிருந்து எடுத்து கொடுக்கப்படும்.

எதிர்கால திட்டங்கள்

1.   நெல்லிக்குப்பம் நகரில் குடிசை வீடுகள் தீப்பிடித்தால் உதவுவது
நமதூரில் உள்ள பெண்கள் ஆலிமா படிக்க ஆசைப்பட்டால் அவர்களுக்கான செலவை ஏற்பது.
3.   பித்ரா வசூலித்து விநியோகம் செய்தல்
4.   ஊரில் மருத்துவம் தேவைப்படுவோருக்கு குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தல்
5.   ஊரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மஜ்லிஸ் மூலம் அனைத்து நல திட்டங்களும் stream line செய்யப்பட்டு உரியவர்களுக்கு கொண்டு செல்லல்.
6.   Nisa, Nelma போன்ற வெளிநாட்டு நெல்லிக்குப்பம் அமைப்புகளோடு எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து ஊரின் வளர்ச்சிக்கு பாடுபடுதல்
7.  ஏழை மாணவர்களுக்கு உதவி தொகை அல்லது கடன் வழங்குதல்
8.  அரசின் நல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க உதவி செய்தல்
9.  நெல்லிக்குப்பம் நகரில் ஒரு மாதிரி இஸ்லாமிய பள்ளி கூடம் அமைக்க பாடுபடுதல்
10 நெல்லிக்குப்பத்தில் விதவை பெண்களுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்குதல்

இறுதியாக நிவாவின் பொருளாளர் சகோ. ஹலீல் ரஹ்மான் நன்றி நவில அனைவர்க்கும் சுவையான புலாவ் உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியின் வீடியோவும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்று வந்த சகோதரர்கள் ஆர்வத்துடன் தங்கள் சந்தாவை அன்றே செலுத்தியது நிவாவின் மேல் உள்ள நம்பிக்கையை பறைசாற்றுகிறது. இருளை கிழித்து வரும் சூரியனின் வருகையை போன்ற இந்நம்பிக்கையை இன்ஷா அல்லாஹ் நிவா காப்பாற்ற துஆ செய்யுங்கள்.

Sunday, March 6, 2011

குவைத்தில் உள்ள கல்ப் ஸ்பிக் (Gulf Spic) நிறுவனத்திற்கு சென்னையில் நேர்முக தேர்வு


அன்பார்ந்த நெல்லிக்குப்பம் சகோதரர்களே

அஸ்ஸலாமு அலைக்கும். நம் அறிமுக விழாவில் அறிவித்ததை போல் வேலைவாய்ப்பு பகுதியை தொடங்கி உள்ளோம்.

குவைத்தில் பிரபல நிறுவனங்களில் ஒன்றான கல்ப் ஸ்பிக் நிறுவனம் (Gulf Spic) குவைத்தில் தொடங்கவுள்ள பல புதிய திட்டங்களுக்காக நிறைய நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளது (Preferably in Oil and Gas sector). அதற்கான நேர்முக தேர்வு சென்னை மற்றும் மும்பையில் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. கீழ்காணும் பதவிகளுக்கு தகுதி உள்ளவர்கள் bbsr6@asmacs.net எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் சுய விபரத்தை அனுப்பினால் shortlisted candidates நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படும் போது நேர்முக தேர்வுக்கு வர வேண்டிய இடம், நேரம் தெரிவிக்கப்படும். எனவே சுய விபரத்தில் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை மறவாமல் தெரியப்படுத்தவும்.
POSITIONS:-
1. Construction Manager(B. E. (Mech.))- 12+ Years of Experience, Should have worked in Major Plant Construction projects in Oil, Gas & Petrochemical Sectors with deep knowledge in Piping & Equipment Erection
2. Piping Engineer(B. E. (Mech.))- 8+ Years Experience in Piping / Structural works in Oil & Gas Sectors
3. Electrical Engineer(B. E. (EEE) or Equivalent)- 8+ Years Experience in Substation works, Ligting Earthing works, HV/LV Cable Terminations & Testing, Commissioning works, etc., in Oil & Gas Sector
4. Civil Engineer(B. E. (Civil))- 8+ Years Experience in Industrial Rcc Foundations, Buildings, Water Retaining Structures in Oil & Gas Sector, preferably in Middle East
5. Planning Engineers(B. E. (Mech))- 8+ Years Experience in Planning/ Scheduling in EPC Projects involving all disciplines of work related to Refinery, Petrochemical, Oil & Gas Industries. Need to be proficient in Primavera Project Planner (P3/P6) and MS Office Applications
6. QA/ QC Engineers(B. E. (Mech)/ (Metalurgy))- 8+ Years Experience in all QA/ QC activities related to Oil & Gas, Petrochemical Sectors & Refineries
7. Safety Engineer(Degree + PG Diploma in Safety)- 8+ Years Experience in Industrial Safety in the field of Oil & Gas Sectors, Middle East experience preferred
8. Civil Supervisor(Diploma in Civil)- 7+ Years Hands on experience in civil Works in Oil & Gas Sectors Middle East experience preferred
9. Safety Supervisor(Diploma in any discipline or Science Graduation)- Experience in Industrial Safety in the field of Oil & Gas Sectors, Middle East experience preferred
10. Planners(Diploma in Mech.)- 7+ Years Experience in Planning. Scheduling in EPC Projects, related to Refinery Petrochemical, Oil & Gas Industries. Need to be proficient in Primavera Project Planner (P3/P6) and Ms Office Applications.

Document We require at the time of interview
CV with original Education Certificate, Experience Certificate , Passport with 1 color photo.
Email: bbsr6@asmacs.net
Contact No:0674 3203234

Tuesday, March 1, 2011

மார்ச் 4 நிகழ்ச்சி நிரல்


இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிகிழமை (04.03.2011) மாலை 6 மணிக்கு மஃரிப் தொழுகைக்கு பின் தஞ்சை ரெஸ்டாரெண்டில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) முதல் வெகுஜன கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து நெல்லிக்குப்பம் முஸ்லீம் சகோதரர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்


நிகழ்ச்சி நிரல்

கிரா அத் : ஹாபிழ். ஜுல்பிகார் துணை செயலாளர்
வரவேற்புரை : சகோ. சபீர் அலி, துணை செயலாளர்
அறிமுக உரை : நிவா ஏன் ? எதற்கு ?சகோ. மன்சூர், தலைவர்
இஸ்லாமிய சிறப்புரை : நிவாவின் கனவு நகரம் பொறியாளர். ஃபெரோஸ்கான், செயலாளர்
திட்டங்கள் வாசித்தல் : சகோ. அப்துர் ரஹ்மான், பகுதி பிரதிநிதி, சகோ. பக்ருதீன், ஆலோசனை குழு உறுப்பினர்
நன்றியுரை : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்.
நிகழ்ச்சி தொகுப்பு : சகோ. பாபு, துணை தலைவர்.


அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கம் (NIWA Kuwait) பைலா


நிவாவின் நிர்வாகிகள் 18.02.11 அன்று அப்பாஸியாவில் ஒன்று கூடி பைலாவை (By law) தயாரித்தனர்.

பைலாவின் முக்கிய விபரங்கள் பின் வருமாறு

முடிவுகள் எடுத்தல்
நிவா முடிவுகள் எடுக்க நான்கு அடுக்கு முறைகளை கொண்டுள்ளது.
நிர்வாக குழு, ஆலோசனை குழு, பகுதி பிரதிநிதி குழு, உறுப்பினர்கள் குழு என மொத்தம் நான்கு அடுக்கு முறை உள்ளது.
உறுப்பினர்கள் நிவாவின் வளர்ச்சிக்காக சொல்லும் ஆலோசனைகள் நிர்வாக குழுவின் பரிசீலனைக்கு பிறகு ஏற்று கொள்ளப்படும்.
அந்தந்த பகுதி / மஹல்லா பிரச்னைகள் பகுதி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
ஆலோசனை குழு உறுப்பினர்களிடமிருந்து பொதுவான ஆலோசனைகள் பெறப்படுவதோடு சங்கத்தின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு பெறப்படும்.
இறுதி முடிவுகள் நிர்வாக குழுவின் ஒட்டு மொத்த சம்மதத்தின் அடிப்படையில் எடுக்கப்படும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தலைவரும் செயலாளரும் இறுதி முடிவு எடுப்பர். அங்கும் கருத்து வேறுபாடு ஏற்படுமானால் பெரும்பான்மை முடிவு ஒப்பு கொள்ளப்படும்.

ஒவ்வோர் மாதமும் நடக்கும் மாதாந்திர அமர்வில் பொருளாளர் கணக்கு சமர்பிப்பார்.

நிவா எவ்வியக்கத்தையும் அமைப்பையும் ஜமாத்தையும் சார்ந்ததல்ல. எவ்வியக்கத்தில் உள்ளோரும் இதில் உறுப்பினராக, பொருப்பாளராக இருக்கலாம்.

நிர்வாக குழுவின் காலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு 2011 பிப்ரவரியிலிருந்து 2013 டிசம்பர் வரை செயல்படும். அதன் பிறகு புதிய நிர்வாக குழு கால அளவை முடிவு செய்யும். இடையில் யாரேனும் ஊருக்கு கேன்சலில் செல்ல நேரிட்டால் அல்லது இறப்பெய்தினால் தகுதியான நபர் நிர்வாக குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சந்தா
உறுப்பினர்களின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு குறைந்த பட்சமாக மாதம் 1 குவைத் தினார் சந்தா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரவரின் வசதிக்கேற்ப எத்துணை மாதங்கள் சேர்த்தும் கொடுத்து கொள்ளலாம்.

உடனடி திட்டங்கள்
தற்போது தான் நிவா உதித்திருப்பதால் முதலில் குவைத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சகோதரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களும், இன்ஷா அல்லாஹ் ஓரளவு பொருளாதாரம் சேர்ந்த பிறகு நெல்லிக்குப்பம் நகருக்கு வளம் அளிக்கும் திட்டங்களும் செய்ய நாடியுள்ளோம்.
1.   பைத்துல் மால் – வட்டியில்லா கடன் திட்டம்
குவைத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சகோதரர்கள் பலர் மிக குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதால் சிறு பிரச்னைக்கும் வட்டியை நோக்கி செல்கின்றனர். இந்நிலையை மாற்ற வட்டியில்லா கடன் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கண்டிப்பாக நிர்வாக குழுவில் உள்ள நிர்வாகிகளுக்கும் ஆலோசனை குழு உறுப்பினர்களும் பயன் பெற மாட்டார்கள்.
இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் அக்காமா (விசா) அடிக்க முடியா சூழல் இருந்தால் சங்கத்தில் இருந்து கடன் வாங்கலாம். அது போல் அவர்களின் ஊரில் உள்ள குடும்பத்தாரின் (தாய், தந்தை, தங்கை போன்ற உறவுகள்) மருத்துவ மற்றும் திருமண விஷயங்களுக்கு உதவி பெறலாம்). அதிகபட்சமாக 150 குவைத் திர்ஹம் வரை கடன் வழங்கப்படும். அவர்களுக்கு 2 நபர்கள் ஜாமீன் வழங்க வேண்டும். கடன் தேவைப்படுவோர் விண்ணப்பம் எழுதி பகுதி நிர்வாகி மூலமாக அல்லது நேரடியாக நிர்வாக குழுவில் உள்ளோரிடம் கொடுக்க வேண்டும். விண்ணப்பதில் 2 ஜாமீன் தாரர்களின் கையெழுத்து இடம் பெற வேண்டும். பின் நிர்வாக குழு பரீசிலித்து கடன் கொடுக்கும். கடன் கொடுத்த அடுத்த மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் 25 குவைத் திர்ஹம் வீதம் கொடுக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் லைசென்ஸ்க்குகாக விண்ணப்பிப்போரின் நிலையை அலசி case by case study ஆக முடிவு எடுக்கப்படும். இத்திட்டம் ஜூன் மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் இன்ஷா அல்லாஹ்.

2.   மரணமடைந்தோருக்கு உதவி தொகை

குவைத்தில் பணியாற்றும் நெல்லிக்குப்பம் சகோதரர்கள் யாரேனும் குவைத்தில் விபத்திலோ அல்லது சாதாரணமாகவோ மரணித்து விட்டால் யாராக இருந்தாலும் அவர்களுக்காக பொது வசூல் செய்யப்படும். எவ்வளவு தொகை வசூலாகிறதோ அது அக்குடும்பத்தினருக்கு கொடுக்கப்படும். வசூலாகும் தொகை 25,000 இந்திய ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பைத்துல்மாலிலிருந்து எடுத்து கொடுக்கப்படும்.

எதிர்கால திட்டங்கள்

1.   நெல்லிக்குப்பம் நகரில் குடிசை வீடுகள் தீப்பிடித்தால் உதவுவது
2. நமதூரில் உள்ள பெண்கள் ஆலிமா படிக்க ஆசைப்பட்டால் அவர்களுக்கான செலவை ஏற்பது.
3.   பித்ரா வசூலித்து விநியோகம் செய்தல்
4.   ஊரில் மருத்துவம் தேவைப்படுவோருக்கு குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தல்
5.   ஊரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மஜ்லிஸ் மூலம் அனைத்து நல திட்டங்களும் stream line செய்யப்பட்டு உரியவர்களுக்கு கொண்டு செல்லல்.
6.   Nisa, Nelma போன்ற வெளிநாட்டு நெல்லிக்குப்பம் அமைப்புகளோடு எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து ஊரின் வளர்ச்சிக்கு பாடுபடுதல்
7.   ஏழை மாணவர்களுக்கு உதவி தொகை அல்லது கடன் வழங்குதல்
8.   அரசின் நல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க உதவி செய்தல்
9.   நெல்லிக்குப்பம் நகரில் ஒரு மாதிரி இஸ்லாமிய பள்ளி கூடம் அமைக்க பாடுபடுதல்

ஊரில் நம் பிரதிநிதிகள்
நமது அமைப்புக்கு ஊரில் பிரதிநிதிகளாக கீழ்கண்ட நபர்களை நியமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. உறுப்பினர்களின் கருத்தை கேட்டு முடிவு செய்யப்படும்
1.   அஷ்ரப் அலி, TNEB
2.   சிராஜ் STD
3.   ஹுசைன், சின்ன தெரு

வெளிநாட்டு நெல்லிக்குப்பம் அமைப்புகளுக்கு அதிகாரபூர்வ மின்னஞ்சல் அனுப்பவும் ஆலோசிக்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் வரும் மார்ச் 4ம் தேதி அனைவரையும் உள்ளடக்கி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான இடத்தை தலைவர் மன்சூர் முடிவு செய்து பின் மக்களுக்கு அறிவிக்கப்படும். நிகழ்ச்சி நிரலும் வடிவமைக்கப்பட்டது.