Sunday, April 15, 2012

ஏப்ரல் 13,2012ல் நடந்த நிவா கூட்டம் மற்றும் ID card வழங்கும் நிகழ்ச்சி



மிர்காப் : இறைவனின் பெருங் கருணையால் இறை திருப்தியை இலக்காக கொண்டு குவைத்தில் வாழும் நெல்லிக்குப்பம் சகோதரர்களின் நலனுக்காக இயங்கி வரும் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA) கூட்டம் ஏப்ரல் 13, 2012 அன்று மன்னு ஸல்வா உணவக அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாய் நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பத்தை சார்ந்த மெளலவி. மன்சூர் அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரை நிகழ்த்தினார். தன் உரையில் மக்களின் அபிமானத்தை பெற வேண்டும் எனும் எண்ணமில்லாமல் இறை திருப்தியை இலக்காக கொண்டு செயல்படும் நிவாவின் பயணம் தடம் புரளாமல் செல்ல வாழ்த்துவதாக சொன்னார்.

தலைமையுரைக்கு பின் நிவாவின் துணை செயலாளர் மெளலவி. ஜுல்பிகார் திருமறையின் வசனங்களை ஓதி ஆரம்பித்தார். அடுத்தபடியாக சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் சிராஜுதின் அனைவரையும் வரவேற்றார். வரவேற்புரைக்கு பின் சங்கத்தின் பொருளாளர் ஹலீல் ரஹ்மான் சங்கத்தின் ஓராண்டு வரவு – செலவு கணக்கையும் வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்களின் பட்டியலையும் சமர்பித்தார்.

மஃரிப் தொழுகைக்கு பின் “இறைவனிடம் பேசுவோமா” எனும் தலைப்பில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் ஃபெரோஸ்கான் சிறப்புரையாற்றினார். பேசுவதை விட எளிதான செயல் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டவர் இறைவனிடம் பேச வாய்ப்பிருந்தும் எத்துணை பேர் அதனை முறையாக பயன்படுத்துகிறோம் என்று கேள்வி எழுப்பினார்.
துஆ செய்வதில் அவசரப்பட கூடாது, நிராசை அடைய கூடாது என்றும் இறைவன் நிச்சயம் தருவான் எனும் முழுமையான நம்பிக்கையுடன் இறைவனிடம் பிராத்திக்க வேண்டும் என்றும் கூறியவர் துஆ செய்வதில் ஆதத்தின் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் துஆ செய்வதின் ஒழுக்கங்கள், துஆ ஏற்கப்படும் சிறப்பான நேரங்கள் போன்றவற்றையும் விரிவாக விளக்கினார்.

நிவா நிகழ்வுகள் எனும் தலைப்பில் பேசிய சங்கத்தின் துணை செயலாளர் சபீர் அலி நிவா ஊரில் நடத்த உள்ள அல்ஹம்துலில்லாஹ் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி குறித்தும் சந்தா வசூல் செய்வதற்காக குவைத்தில் பகுதி வாரியாக ஆட்கள் நியமிக்கப்பட உள்ளது குறித்தும் நிவாவின் நெல்லிக்குப்பம் நிர்வாகிகள் விரிவாக்கம் குறித்தும் பேசினார்.

அதற்கு பின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சங்கத்தின் செயலாளர் ஃபெரோஸ்கான் மற்றும் பொருளாளர் ஹலீல் ரஹ்மான் பதிலளித்தனர். 10 மற்றும் 12வது வகுப்புகளில் தேர்வாகிறவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் தேவைப்படுவோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு செயலாளர் ஃபெரோஸ்கான் கூறினார்.

பின்னர் நிவாவை ஒரு புரோபஷனல் அமைப்பாக கொண்டு செல்லும் முனைப்பில் நிவா உறுப்பினர்களுக்கு நிவா உறுப்பினர் அட்டை (ID card) வழங்கப்பட்டது. முதல் அட்டையை சங்கத்தின் மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் பஷீர் அவர்கள் செயலாளர் ஃபெரோஸ்கான் அவர்களுக்கு வழங்க பின் செயலாளர் அனைவர்க்கும் வழங்கினார்கள்


நிகழ்ச்சியின் நிறைவாக மெளலவி. வாரிஸ் அவர்கள் நன்றியுரை கூறி துஆ ஓதி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். கூட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முஹமது யூசுப் அழகாக நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். நிச்சயம் இந்நிகழ்ச்சி துஆவின் முக்கியத்துவத்தையும் துஆ செய்யும் முறைகள் குறித்தும் ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

Wednesday, April 11, 2012

ஏப்ரல் 13, 2012 நிவா நிகழ்ச்சி நிரல் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (13.04.2012) மாலை 5.00 மணிக்கு மன்னு ஸல்வா உணவகத்தில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) வழமையான கூட்டம் நடைபெற உள்ளது. வழமையான விஷயங்களோடு நிவா உறுப்பினர் அட்டை வழங்குதலும் நடைபெற உள்ளதால் அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை : சகோ. ஷாஹுல் ஹமீது, துணை தலைவர்
கிரா அத் : மெளலவி ஜுல்பிகார் மன்பயீ, துணை செயலாளர்
வரவேற்புரை : சகோ. சிராஜுதீன், ஆலோசனை குழு உறுப்பினர்
சிறப்புரை :  “இறைவனிடம் பேசுவோமா ?”
            பொறியாளர். முஹமது ஃபெரோஸ்கான், செயலாளர்
வரவு – செலவு அறிக்கை தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்
ஊர் நிகழ்வுகள் : சகோ, சபீர் அலி, துணை செயலாளர்
உறுப்பினர் அட்டை வழங்கல்
நன்றியுரை : சகோ. முஹமது யூசுப், உறுப்பினர்
நிகழ்ச்சி தொகுப்புரை : சகோ. அஷ்ரப் அலி, ஆலோசனை குழு உறுப்பினர்
அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவா குறித்த சந்தேகங்களை எழுப்பி தெளிவு பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
குறித்த நேரத்தில் வருகை தந்து நிவாவின் பணிகள் சிறக்க தோள் கொடுக்குமாறு குவைத்தில் வாழும் அனைத்து நெல்லிக்குப்பம் இஸ்லாமிய சகோதரர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.