Friday, December 21, 2012

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்

(NIWA)

3-ம் ஆண்டு துவக்க விழா

அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் வரும்  வெள்ளிக்கிழமை (11-01.2013) மாலை 5.00 மணிக்கு  மன்னு ஸல்வா உணவகத்தில்  நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) 3-ம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


நிகழ்ச்சி நிரல்
நிகழ்ச்சி தொகுப்பு : சகோ. க்ருதீன் ஆலோசனை குழு உறுப்பினர்
கிரா அத் : மெளலவி வாரிஸ் மன்பயீ,
தலைமை : சகோ. முஹமது ஜும்மா ஆலோசனை குழு உறுப்பினர்

சிறப்புரை :  மெளலவி. மன்சூர் - கோட்டக்குப்பம்

வரவு – செலவு தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்       

வினா விடை தொகுப்பாளர்: மன்சூர் தலைவர்

நன்றியுரை : சகோ. நாசர், செயலாளர்

அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Sunday, November 18, 2012

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கம்

                         (NIWA)

அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (07-12.2012) மாலை 5.00 மணிக்கு  நவம்பர் மாதம் கூட்டம் நடந்த கமர்சியல் மார்க்கெட் நம்பர் 3 அருகில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) வழமையான கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு
நிர்வாகிகள்

Sunday, April 15, 2012

ஏப்ரல் 13,2012ல் நடந்த நிவா கூட்டம் மற்றும் ID card வழங்கும் நிகழ்ச்சி



மிர்காப் : இறைவனின் பெருங் கருணையால் இறை திருப்தியை இலக்காக கொண்டு குவைத்தில் வாழும் நெல்லிக்குப்பம் சகோதரர்களின் நலனுக்காக இயங்கி வரும் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA) கூட்டம் ஏப்ரல் 13, 2012 அன்று மன்னு ஸல்வா உணவக அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாய் நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பத்தை சார்ந்த மெளலவி. மன்சூர் அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரை நிகழ்த்தினார். தன் உரையில் மக்களின் அபிமானத்தை பெற வேண்டும் எனும் எண்ணமில்லாமல் இறை திருப்தியை இலக்காக கொண்டு செயல்படும் நிவாவின் பயணம் தடம் புரளாமல் செல்ல வாழ்த்துவதாக சொன்னார்.

தலைமையுரைக்கு பின் நிவாவின் துணை செயலாளர் மெளலவி. ஜுல்பிகார் திருமறையின் வசனங்களை ஓதி ஆரம்பித்தார். அடுத்தபடியாக சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் சிராஜுதின் அனைவரையும் வரவேற்றார். வரவேற்புரைக்கு பின் சங்கத்தின் பொருளாளர் ஹலீல் ரஹ்மான் சங்கத்தின் ஓராண்டு வரவு – செலவு கணக்கையும் வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்களின் பட்டியலையும் சமர்பித்தார்.

மஃரிப் தொழுகைக்கு பின் “இறைவனிடம் பேசுவோமா” எனும் தலைப்பில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் ஃபெரோஸ்கான் சிறப்புரையாற்றினார். பேசுவதை விட எளிதான செயல் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டவர் இறைவனிடம் பேச வாய்ப்பிருந்தும் எத்துணை பேர் அதனை முறையாக பயன்படுத்துகிறோம் என்று கேள்வி எழுப்பினார்.
துஆ செய்வதில் அவசரப்பட கூடாது, நிராசை அடைய கூடாது என்றும் இறைவன் நிச்சயம் தருவான் எனும் முழுமையான நம்பிக்கையுடன் இறைவனிடம் பிராத்திக்க வேண்டும் என்றும் கூறியவர் துஆ செய்வதில் ஆதத்தின் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் துஆ செய்வதின் ஒழுக்கங்கள், துஆ ஏற்கப்படும் சிறப்பான நேரங்கள் போன்றவற்றையும் விரிவாக விளக்கினார்.

நிவா நிகழ்வுகள் எனும் தலைப்பில் பேசிய சங்கத்தின் துணை செயலாளர் சபீர் அலி நிவா ஊரில் நடத்த உள்ள அல்ஹம்துலில்லாஹ் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி குறித்தும் சந்தா வசூல் செய்வதற்காக குவைத்தில் பகுதி வாரியாக ஆட்கள் நியமிக்கப்பட உள்ளது குறித்தும் நிவாவின் நெல்லிக்குப்பம் நிர்வாகிகள் விரிவாக்கம் குறித்தும் பேசினார்.

அதற்கு பின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சங்கத்தின் செயலாளர் ஃபெரோஸ்கான் மற்றும் பொருளாளர் ஹலீல் ரஹ்மான் பதிலளித்தனர். 10 மற்றும் 12வது வகுப்புகளில் தேர்வாகிறவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் தேவைப்படுவோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு செயலாளர் ஃபெரோஸ்கான் கூறினார்.

பின்னர் நிவாவை ஒரு புரோபஷனல் அமைப்பாக கொண்டு செல்லும் முனைப்பில் நிவா உறுப்பினர்களுக்கு நிவா உறுப்பினர் அட்டை (ID card) வழங்கப்பட்டது. முதல் அட்டையை சங்கத்தின் மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் பஷீர் அவர்கள் செயலாளர் ஃபெரோஸ்கான் அவர்களுக்கு வழங்க பின் செயலாளர் அனைவர்க்கும் வழங்கினார்கள்


நிகழ்ச்சியின் நிறைவாக மெளலவி. வாரிஸ் அவர்கள் நன்றியுரை கூறி துஆ ஓதி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். கூட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முஹமது யூசுப் அழகாக நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். நிச்சயம் இந்நிகழ்ச்சி துஆவின் முக்கியத்துவத்தையும் துஆ செய்யும் முறைகள் குறித்தும் ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

Wednesday, April 11, 2012

ஏப்ரல் 13, 2012 நிவா நிகழ்ச்சி நிரல் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (13.04.2012) மாலை 5.00 மணிக்கு மன்னு ஸல்வா உணவகத்தில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) வழமையான கூட்டம் நடைபெற உள்ளது. வழமையான விஷயங்களோடு நிவா உறுப்பினர் அட்டை வழங்குதலும் நடைபெற உள்ளதால் அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை : சகோ. ஷாஹுல் ஹமீது, துணை தலைவர்
கிரா அத் : மெளலவி ஜுல்பிகார் மன்பயீ, துணை செயலாளர்
வரவேற்புரை : சகோ. சிராஜுதீன், ஆலோசனை குழு உறுப்பினர்
சிறப்புரை :  “இறைவனிடம் பேசுவோமா ?”
            பொறியாளர். முஹமது ஃபெரோஸ்கான், செயலாளர்
வரவு – செலவு அறிக்கை தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்
ஊர் நிகழ்வுகள் : சகோ, சபீர் அலி, துணை செயலாளர்
உறுப்பினர் அட்டை வழங்கல்
நன்றியுரை : சகோ. முஹமது யூசுப், உறுப்பினர்
நிகழ்ச்சி தொகுப்புரை : சகோ. அஷ்ரப் அலி, ஆலோசனை குழு உறுப்பினர்
அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவா குறித்த சந்தேகங்களை எழுப்பி தெளிவு பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
குறித்த நேரத்தில் வருகை தந்து நிவாவின் பணிகள் சிறக்க தோள் கொடுக்குமாறு குவைத்தில் வாழும் அனைத்து நெல்லிக்குப்பம் இஸ்லாமிய சகோதரர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Monday, February 6, 2012

சிறப்பாய் நடைபெற்ற நிவாவின் ஓராண்டு சிறப்பு நிகழ்ச்சி


மிர்காப் : குவைத்தில் வாழும் நெல்லிக்குப்பம் மக்களை ஒருமுகப்படுத்தி அவ்வொற்றுமையின் வாழும் குவைத்தில் வாழும் சகோதரர்களுக்கும் நமதூருக்கும் சேவை செய்ய தொடங்கப்பட்ட நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கம் (NIWA) தொடங்கி ஓராண்டு நிறைவு அடைவதை ஒட்டி தன்னுடைய முதலாம் ஆண்டு நிறைவின் சிறப்பு விழாவை குவைத் சிட்டியில் உள்ள மன்னு ஸல்வா உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

எவ்வருடமும் இல்லா அளவு கடும் குளிர் குவைத்தை வாட்டி வதைக்கும் நிலையிலும், இரு நாட்கள் விடுமுறை என்பதால் எண்ணற்ற அமைப்புகள் நிகழ்ச்சிகளை வைத்திருப்பதாலும் நிவாவின் நிகழ்ச்சிக்கு வரும் சகோதரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவார்களா என்ற கேள்விக்குறிகளை ஆச்சரியமாக்கும் வகையில் மஃரிப் தொழுகை முடிந்த உடன் சரியாக மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.

நிகழ்ச்சியை தொகுத்தளித்த நிவாவின் செயலாளர் பொறியாளர். ஃபெரோஸ்கான் முதலில் நிவாவின் உறுப்பினர் மெளலவி வாரிஸ் அவர்கள் கிராஅத் ஓத அழைக்க, அவரும் சிறப்பாக குரானின் வசனங்களை அழகிய குரலில் வாசித்தார். தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராய் அழைக்கப்பட்ட சகோ. அப்துல் முஸவ்விர் “ இஸ்லாத்தின் பார்வையில் சமூக சேவைகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
குவைத்தில் அரசு உதவியுடன் செயல்படும் IPC எனப்படும் இஸ்லாமிய பிராசார குழு மாற்று மத சகோதரர்கள் மத்தியில் அழைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அக்குழுவின் சார்பாய் பல்வேறு மொழிகளில் மாத இதழ்கள் வெளி வருகின்றன. தமிழில் வெளியாகும் வசந்தம் எனும் மாத இதழின் ஆசிரியராக இருக்கும் சகோ. அப்துல் முஸவ்விர் சரியான நேரத்துக்கு வந்ததோடு சமூக சேவைகள் என்பதே இன்று ஒவ்வொரு மனிதனும் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காக செய்யும் வேதனையான சூழலை குறிப்பிட்டு இதற்கு மாற்றமாக இஸ்லாமிய வாதிகள் இறை திருப்தியை மட்டும் நாடி சமூக சேவைகளை செய்தால் அதன் ஊடாகவே கூட மனித உள்ளங்களை கொள்ளை கொள்ள முடியும் என்று அழகாய் சமூக சேவைகளும் இபாதத்தே என்று கூறினார்.


சிறப்பு விருந்தினரின் உரைக்கு பின் உரையாற்ற வந்த நிவாவின் செயலாளரும் IGC அழைப்பாளருமான பொறியாளர் ஃபெரோஸ்கான் “நிவா கடந்து வந்த பாதையும் இன்ஷா அல்லாஹ் இனி கடக்க இருப்பதும்” எனும் தலைப்பில் நிவாவின் செயல்பாடுகளை விவரித்து கூறினார். குறிப்பாக நமதூர் சகோதரர்கள் சிறு தேவைகளுக்கும் வட்டியின் பக்கம் செல்வதை தடுக்கும் விதமாக இது வரை 12 நபர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் கடன் கொடுக்கப்பட்டுள்ளதையும், நெல்லிக்குப்பத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு நிவாரனம் வழங்கியதையும், மருத்துவ உதவி வழங்கியதையும் சுட்டி காட்டினார்.

இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் நமதூருக்கும் சேவை செய்யும் விதமாக ஆலிமா படிக்க ஆசைப்படும் பெண்களுக்கு உதவி செய்தல், கல்வி உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் நமதூரில் பைத்துஜ்ஜகாத் மற்றும் மாதிரி இஸ்லாமிய கல்விகூடம் எனும் நீண்ட கால இலக்கை நோக்கி நிவா செயல்படும் என்றும் உறுதியளித்தார். நம்மை போல் பிற வெளிநாடுகளில் இயங்கும் நமதூர் குழுக்களுடன் பேசி ஒருமித்து செயல்பட ஆலோசிக்கப்படும் என்றும் நிவாவின் நெல்லிக்குப்பம் நிர்வாகிகள் விரைவில் விரிவுபடுத்தப்படுவர் என்றும் கூறினார். இறைவன் நாடினால் அடுத்த ஒரு சில மாதங்களில் நிவாவின் அறிமுக விழா நெல்லிக்குப்பத்தில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
அடுத்து நிவாவின் பொருளாளர் சகோ. ஹலீல் ரஹ்மான் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்த பிறகு இன்னொரு சிறப்பு அழைப்பாளரான பெருவநலநல்லூர் முஸ்லீம் ஜமாத்தின் தலைவரும் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் தலைவருமான இக்பால் அவர்கள் நிவாவின் சமூக சேவைகளை பாராட்டி பேசினார். இக்லாஸுடன் செயல்பட்டால் நமது பணிகளை இறைவன் எளிதாக்கி தருவான் எனும் நம்பிக்கை வார்த்தைகளை மொழிந்தார்.
 அடுத்து அனைவரும் எதிர்பார்த்த நிவாவின் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. வினாடி வினா நிகழ்ச்சிக்கு முன் வந்த சகோதரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு 9 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஒவ்வொரு குழுவாய் வெளியேற இறுதியாக எட்டாவது சுற்று முடிவில் குழுக்கள் தரம் பிரிக்கபட்டன. 

முதல் பரிசு வென்ற குழுவில் உள்ள ஐவருக்கும் டிஜிட்டல் கடிகாரங்களை தலைவர் மன்சூர் அவர்கள் வழங்க, இரண்டாம் பரிசாக எமர்ஜென்ஸி லைட்டுகளை செயலாளர் பெரோஸ்கான் அவர்களும், மூன்றாம் பரிசாக ட்ராவல் மக்குகளை பொருளாளர் ஹலீல் ரஹ்மான் அவர்களும் நான்காம் பரிசாக சிடி பவுச்சுகளை ஆலோசனை குழு உறுப்பினர் பஷீர் அவர்களும் மற்ற குழுக்களுக்கு ஆறுதல் பரிசுகளை நிவாவின் நிர்வாகிகளும் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நம் சங்கத்தின் ஆதரவாளர்களான நெல்லை அப்துல் ஹமீதும் திருச்சி ஷாஹுலும் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினர். நிறைவாக நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்த ஆலோசனை குழு உறுப்பினர் ஜும்மா, பரிசளிப்பு நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்த ஆலோசனை குழு உறுப்பினர் கமால், நிகழ்ச்சியை சிறப்பாய் ஏற்பாடு செய்த நிவாவின் நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சிக்கு வந்த உறுப்பினர்கள் என அனைவருக்கும் எல்லாவற்றிக்கும் மேலாக இந்நிகழ்ச்சியை சிறப்பான ஒன்றாக ஆக்கிய வல்ல இறைவனுக்கும் சகோ. பெரோஸ்கான் நன்றி கூற இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்வுக்கு பிறகு செவிக்கு உணவுண்ட சகோதரர்களுக்கு சுவையான உணவு வயிற்றுக்கும் ஈயப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ். எங்களின் பணிகளை உன் திருப்தி நாடியே செய்யும் பாக்கியத்தை தருவாயாக. எங்களின் பணிகளை ஏற்று கொள்வாயாக.
இன்ஷா அல்லாஹ் நிவாவின் நிகழ்ச்சிகள் வீடியோவாக வருங்காலங்களில் q8tamil.wordpress.com எனும் தளத்தில் காணலாம்.

Monday, January 30, 2012

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA) முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு கூட்டம்


அன்பு குவைத் வாழ் நெல்லிக்குப்பம் சகோதரர்களே,                                 
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி
இன்ஷா அல்லாஹ் வரும்
பிப்ரவரி  3ம் தேதி வெள்ளிகிழமை சரியாக மாலை 5.30 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக  நிவா உறுப்பினர் அட்டை வழங்குதலும் வினாடி வினா போட்டிகளும் பரிசளிப்பும் நடைபெற உள்ளது. அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளவும்.
வழமையான நிகழ்வுகளோடு சிறப்பு பேச்சாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

NIWA கடந்த பாதையும் இன்ஷா அல்லாஹ் இனி கடக்க இருப்பதும்    -      
பொறி்யாளர் முஹமது ஃபெரோஸ்கான், செயலாளர், நிவா. அழைப்பாளர் – IGC.
இஸ்லாத்தின் பார்வையில் சமூகசேவைகள்  –                      சகோ. அப்துல் முஸவ்விர், ஆசிரியர், வசந்தம் (IPC) மாத இதழ்,
சகோ. இக்பால், தலைவர், பெருவலநல்லூர் ஜமாத், இஸ்லாமிய வழிகாட்டி மையம் ……………………………………………………………………………………………………………………………
நிகழ்ச்சி ஸ்பான்ஸர் – சகோ. ஷேக் ஜும்மா & பிரதர்ஸ் /  
வினாடி வினா பரிசளிப்பு ஸ்பான்ஸர் – சகோ. ஏ.ஜி.கமால்

Saturday, January 28, 2012

நிவாவில் வழிகாட்டுதல் கமிட்டிகள்

அன்பு சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்ல்லாஹி வ பரக்காதஹு
குவைத்தில் வாழும் நெல்லிக்குப்பம் சகோதரர்களுக்காக தொடங்கப்பட்ட நம் அமைப்பு வட்டியில்லா கடன் திட்டம் உள்ளிட்ட பல முன்னோடி திட்டங்களை தொடங்கி சிறந்த முன்னுதாரணமாய் திகழ்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
அவ்வகையில் பெரும்பாலும் நமதூரை சேர்ந்தவர்கள் தங்கள் வாரிசுகளின் உறவுகளின் மேற்படிப்பு குறித்த விழி்ப்புணர்வு பெறவும், ஊருக்கு செல்பவர்கள் ஊரில் மேற் கொள்ள வேண்டிய காரியங்கள் குறித்து வழிகாட்டுதல் பெறவும் கீழ்காணும் குழுக்களை அமைத்துள்ளோம். மேலும் சிறப்பான பணிகளை நமது சங்கம் தொடர்ந்து செய்ய இறைவனிடத்தில் பிராத்தியுங்கள்.