Friday, April 22, 2011

ஏப்ரல் 8 நிவாவின் இரண்டாம் நிகழ்ச்சி - ஓர் வர்ணனை




அல்ஹம்துலில்லாஹ் வெற்றிகரமான நிவாவின் முதல் கூட்டத்திற்கு பின் இரண்டாவது கூட்டம் ஏப்ரல் 8ம் தேதி மாலை 6.30 மணிக்கு குவைத் சிட்டியில் உள்ள ஹோட்டல் ஷாலிமாரில் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாய் துணை செயலாளர் ஜுல்பிகார் அலி கிராஅத் ஓதினார். பின் அதனை தொடர்ந்து நிவாவின் மற்றொரு துணை செயலாளர் சபீர் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து நிவாவின் ஆலோசனை குழு உறுப்பினர் அஷ்ரப் அலி அவர்கள் நிவாவின் நிர்வாகிகளை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதற்கடுத்து “செய்ய மறந்த கடமை” எனும் தலைப்பில் நிவாவின் செயலாளர் பொறியாளர் ஃபெரோஸ்கான் சிறப்புரையாற்றினார். இன்று முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு மிக முக்கிய காரணம் முஸ்லீம்கள் மறந்து போன அழைப்பு பணியே ஆகும் என்றுரைத்தார்.

அழைப்பு பணி செய்யாததால் இஸ்லாத்தை பற்றி பிற மக்களிடம் ஏற்பட்டுள்ள தவறான கருத்துகளையும், ஓரே ஒரு ஹதீஸை நினைவுபடுத்தி பழம் கொடுத்ததால் பன்னீர் செல்வம் எப்படி மிக சிறந்த அழைப்பாளர் அப்துர் ரஹ்மானாக மாறினார் என்பதை அழகுற குறிப்பிட்டார். அது போல் சிறுவன் இம்ரான் மூலம் என்.டி.திவாரியின் பேரன் ஆச்சார்யா திரிவேதி இன்று அஹ்மது பண்டிட் எனும் அழைப்பாளராக உருவெடுத்திருப்பது, சமரசம் பத்திரிகையின் ஆசிரியர் சிராஜுல் ஹசன் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு என நடைமுறை நிகழ்வுகளின் மூலம் அழைப்பு பணியின் தாக்கங்களை எடுத்துரைத்தார்.
அது போல் இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்களிடம் இருக்கும் ஆர்வம் பரம்பரை முஸ்லீம்களிடம் இல்லாமல் இருப்பதையும் அதை நிவர்த்தி செய்ய வேண்டிய முறைகளையும் பட்டியலிட்டார். அவரின் இஸ்லாமிய சிறப்புரையை தொடர்ந்து நிவா கடந்த ஒரு மாதத்தில் செய்த பணிகளை பற்றி மக்கள் தொடர்பாளர் ஹாஜா சாதிக் விளக்கினார். நிஸா, நெல்மா உள்ளிட்ட நெல்லி வாழ் வெளிநாட்டு அமைப்பினர், ஐக்கிய மஜ்லிஸிடம் தொடர்பு ஏற்படுத்தியது, ஊரில் தொடர்பாளர்களை நியமித்தது உள்ளிட்ட விஷயங்களை கூறினார்.

அதனை தொடர்ந்து நிவாவின் செயலாளர் பொறியாளர் ஃபெரோஸ்கான் மே மாதம் நமதூரில் நிவாவின் சார்பாக அல்ஹம்துலில்லாஹ் எனும் ஒலி – ஒளி நிகழ்ச்சியும், பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெறும் என்று அறிவித்தார். அது போல் நிவாவின் பொதுகூட்டங்களில் குவைத்தில் வாழும் நமதூரை சேர்ந்த மாற்று மத சகோதரர்களை பார்வையாளர்களாக அனுமதிப்பது குறித்து பரீசிலிக்கப்படும் என்றும் பெருநாட்களில் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் ஐயங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மஜ்லிஸிடமிருந்து கட்டிட பணிக்காக நன்கொடை கேட்டு வந்துள்ள விவகாரம் குறித்து அது சம்பந்தமாக சகோதரர்கள். மன்சூர், ஹாஜா சாதிக், பாபு தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அவர்களிடத்தில் வசூலாகும் தொகை ஐக்கிய மஜ்லிஸுக்கு கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். ஊரில் அடுத்த மாதம் முதல் ஏழை மையித்துகள் அடக்கம் செய்ய பொருளாதார உதவி அளிக்கப்படும் என்றும் ஆலிமா படிக்க ஆசைப்படும் பெண்களுக்கு ஆலிமா படிக்க வைக்க உதவி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நிவாவின் அறிமுக விழா குறுந்தகடுகள் விற்பனை செய்யப்பட்டதுடன் நிவாவின் திட்டங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அடுத்த விழா ஜூன் 10 ம் தேதி இன்ஷா அல்லாஹ் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. நிவாவின் பொருளாளர் ஹலீல் ரஹ்மான் மார்ச் மாதத்துக்கான கணக்கு வழக்கை தாக்கல் செய்தார். சந்தா விபரம் மற்றும் நன்கொடை விபரங்கள் மற்றும் செலவினங்கள் விபரங்களை தாக்கல் செய்தார். அவரின் அறிக்கை தாக்கலுக்கு பின் சகோதரர் ஷாஹுல் ஹமீது நன்றியுரை கூறினார். விழாவின் இறுதியில் அனைவருக்கும் சுவையான உணவு பரிமாறப்பட்டது. எல்லா புகழும் வல்லோன் இறைவனுக்கே.

2 comments:

  1. ماشاء الله

    We wish and pray NIWA a great success.

    ReplyDelete
  2. எல்லாபுகலும் அல்லாஹ் ஒருவனுக்கு

    ReplyDelete