Tuesday, September 13, 2011

செப்டம்பர் 16 நிவா அமர்வு - நிகழ்ச்சி நிரல்


இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிகிழமை (16.09.2011) மாலை 5.30 மணிக்கு மன்னு சல்வா ரெஸ்டாரெண்டில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) மாதாந்திர கூட்டம் நடைபெற உள்ளது. ரமலானில் நமதூரில் பித்ரா விநியோகம் செய்தது, இஸ்லாத்தை இணையதளத்தில் முறையாக கற்கும் கல்வி வாய்ப்பு, வட்டியில்லா கடன் திட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல்

தலைமை : சகோ. ஜும்மா, ஆலோசனை குழு உறுப்பினர்
கிரா அத் : மெளலவி மன்சூர்
வரவேற்புரை : சகோ. நாசர், ஆலோசனை குழு உறுப்பினர்
இஸ்லாமிய சிறப்புரை :  ரமலானுக்கு பின்னும்   பொறியாளர். முஹமது ஃபெரோஸ்கான், செயலாளர்
வட்டியில்லா கடன் பெறும் பயனாளிகள், கல்வி வேலைவாய்ப்பு மற்றும் ரமலான் பித்ரா அறிவிப்புகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் உண்டு
வரவு - செலவு அறிக்கை தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்
நன்றியுரை : சகோ. ஹாஜா சாதிக், மக்கள் தொடர்பாளர்
நிகழ்ச்சி தொகுப்பு : மெளலவி வாரிஸ், உறுப்பினர்

அனைவருக்கும் இரவு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தாமதமாக முடிவடையும் போது தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல தாமதமாவதால் அனைத்து சகோதரர்களும் குறித்த நேரத்துக்கு வருமாறு கேட்டு கொள்கிறோம். அனைவரும் தங்கள் சந்தேகங்களை எழுப்பி தெளிவு பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

  1. நிவாவின் பணிகள் இறைவனின் உதவியால் மிக சிறப்பாக நம் மார்க்கம் வகுத்து தந்த முறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது மனதுக்கு மிக மகிழ்சி அளிக்கின்றது,குறிப்பாக தாயகத்தில் அவசியதேவைக்காகவும் பணம் அனுப்ப இயலானிலையில் ஒரு சில சகோதரர்கள் வட்டி எனும் கொடிய பிடியில் சிக்கிக் கொள்கின்றார்கள்,அந்த கொடிய பாவகரமான செயலை தடுப்பதில் நிவா செயல்பட்டுக் கொண்டு இருப்பது வறவேற்க்கதக்க ஒன்று,எனது அருமை நிவா நிர்வாகிகளுக்கும்,உறுப்பினர்களுக்கும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய இருகரம் ஏந்துகின்றேன், குவைத்தில் உள்ள அனைத்து NPM சகோதரர்களும் நிவாவில் அங்கத்தினர் ஆக வேண்டும் என கேட்டுக்கொள்ளும்--
    A, அப்துல் அஜீஸ்-தலைவர்
    J,முஜீப்(a)ஃபஸிலுதீன்--செயலாளர்
    M.Y.சம்சு (JOTAN PAINT)-பொருளாளர்
    S,ஹபிபுல்லா பாஷா,மக்கள் தொடர்பாளர் மற்றும் நிர்வாகிகள்,உறுப்பினர்கள்
    நெல்லிக்குப்பம் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் (ரியாத் மத்திய மண்டலம்,)

    ReplyDelete