Tuesday, March 1, 2011

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கம் (NIWA Kuwait) பைலா


நிவாவின் நிர்வாகிகள் 18.02.11 அன்று அப்பாஸியாவில் ஒன்று கூடி பைலாவை (By law) தயாரித்தனர்.

பைலாவின் முக்கிய விபரங்கள் பின் வருமாறு

முடிவுகள் எடுத்தல்
நிவா முடிவுகள் எடுக்க நான்கு அடுக்கு முறைகளை கொண்டுள்ளது.
நிர்வாக குழு, ஆலோசனை குழு, பகுதி பிரதிநிதி குழு, உறுப்பினர்கள் குழு என மொத்தம் நான்கு அடுக்கு முறை உள்ளது.
உறுப்பினர்கள் நிவாவின் வளர்ச்சிக்காக சொல்லும் ஆலோசனைகள் நிர்வாக குழுவின் பரிசீலனைக்கு பிறகு ஏற்று கொள்ளப்படும்.
அந்தந்த பகுதி / மஹல்லா பிரச்னைகள் பகுதி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
ஆலோசனை குழு உறுப்பினர்களிடமிருந்து பொதுவான ஆலோசனைகள் பெறப்படுவதோடு சங்கத்தின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு பெறப்படும்.
இறுதி முடிவுகள் நிர்வாக குழுவின் ஒட்டு மொத்த சம்மதத்தின் அடிப்படையில் எடுக்கப்படும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தலைவரும் செயலாளரும் இறுதி முடிவு எடுப்பர். அங்கும் கருத்து வேறுபாடு ஏற்படுமானால் பெரும்பான்மை முடிவு ஒப்பு கொள்ளப்படும்.

ஒவ்வோர் மாதமும் நடக்கும் மாதாந்திர அமர்வில் பொருளாளர் கணக்கு சமர்பிப்பார்.

நிவா எவ்வியக்கத்தையும் அமைப்பையும் ஜமாத்தையும் சார்ந்ததல்ல. எவ்வியக்கத்தில் உள்ளோரும் இதில் உறுப்பினராக, பொருப்பாளராக இருக்கலாம்.

நிர்வாக குழுவின் காலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு 2011 பிப்ரவரியிலிருந்து 2013 டிசம்பர் வரை செயல்படும். அதன் பிறகு புதிய நிர்வாக குழு கால அளவை முடிவு செய்யும். இடையில் யாரேனும் ஊருக்கு கேன்சலில் செல்ல நேரிட்டால் அல்லது இறப்பெய்தினால் தகுதியான நபர் நிர்வாக குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சந்தா
உறுப்பினர்களின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு குறைந்த பட்சமாக மாதம் 1 குவைத் தினார் சந்தா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரவரின் வசதிக்கேற்ப எத்துணை மாதங்கள் சேர்த்தும் கொடுத்து கொள்ளலாம்.

உடனடி திட்டங்கள்
தற்போது தான் நிவா உதித்திருப்பதால் முதலில் குவைத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சகோதரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களும், இன்ஷா அல்லாஹ் ஓரளவு பொருளாதாரம் சேர்ந்த பிறகு நெல்லிக்குப்பம் நகருக்கு வளம் அளிக்கும் திட்டங்களும் செய்ய நாடியுள்ளோம்.
1.   பைத்துல் மால் – வட்டியில்லா கடன் திட்டம்
குவைத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சகோதரர்கள் பலர் மிக குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதால் சிறு பிரச்னைக்கும் வட்டியை நோக்கி செல்கின்றனர். இந்நிலையை மாற்ற வட்டியில்லா கடன் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கண்டிப்பாக நிர்வாக குழுவில் உள்ள நிர்வாகிகளுக்கும் ஆலோசனை குழு உறுப்பினர்களும் பயன் பெற மாட்டார்கள்.
இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் அக்காமா (விசா) அடிக்க முடியா சூழல் இருந்தால் சங்கத்தில் இருந்து கடன் வாங்கலாம். அது போல் அவர்களின் ஊரில் உள்ள குடும்பத்தாரின் (தாய், தந்தை, தங்கை போன்ற உறவுகள்) மருத்துவ மற்றும் திருமண விஷயங்களுக்கு உதவி பெறலாம்). அதிகபட்சமாக 150 குவைத் திர்ஹம் வரை கடன் வழங்கப்படும். அவர்களுக்கு 2 நபர்கள் ஜாமீன் வழங்க வேண்டும். கடன் தேவைப்படுவோர் விண்ணப்பம் எழுதி பகுதி நிர்வாகி மூலமாக அல்லது நேரடியாக நிர்வாக குழுவில் உள்ளோரிடம் கொடுக்க வேண்டும். விண்ணப்பதில் 2 ஜாமீன் தாரர்களின் கையெழுத்து இடம் பெற வேண்டும். பின் நிர்வாக குழு பரீசிலித்து கடன் கொடுக்கும். கடன் கொடுத்த அடுத்த மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் 25 குவைத் திர்ஹம் வீதம் கொடுக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் லைசென்ஸ்க்குகாக விண்ணப்பிப்போரின் நிலையை அலசி case by case study ஆக முடிவு எடுக்கப்படும். இத்திட்டம் ஜூன் மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் இன்ஷா அல்லாஹ்.

2.   மரணமடைந்தோருக்கு உதவி தொகை

குவைத்தில் பணியாற்றும் நெல்லிக்குப்பம் சகோதரர்கள் யாரேனும் குவைத்தில் விபத்திலோ அல்லது சாதாரணமாகவோ மரணித்து விட்டால் யாராக இருந்தாலும் அவர்களுக்காக பொது வசூல் செய்யப்படும். எவ்வளவு தொகை வசூலாகிறதோ அது அக்குடும்பத்தினருக்கு கொடுக்கப்படும். வசூலாகும் தொகை 25,000 இந்திய ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பைத்துல்மாலிலிருந்து எடுத்து கொடுக்கப்படும்.

எதிர்கால திட்டங்கள்

1.   நெல்லிக்குப்பம் நகரில் குடிசை வீடுகள் தீப்பிடித்தால் உதவுவது
2. நமதூரில் உள்ள பெண்கள் ஆலிமா படிக்க ஆசைப்பட்டால் அவர்களுக்கான செலவை ஏற்பது.
3.   பித்ரா வசூலித்து விநியோகம் செய்தல்
4.   ஊரில் மருத்துவம் தேவைப்படுவோருக்கு குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தல்
5.   ஊரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மஜ்லிஸ் மூலம் அனைத்து நல திட்டங்களும் stream line செய்யப்பட்டு உரியவர்களுக்கு கொண்டு செல்லல்.
6.   Nisa, Nelma போன்ற வெளிநாட்டு நெல்லிக்குப்பம் அமைப்புகளோடு எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து ஊரின் வளர்ச்சிக்கு பாடுபடுதல்
7.   ஏழை மாணவர்களுக்கு உதவி தொகை அல்லது கடன் வழங்குதல்
8.   அரசின் நல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க உதவி செய்தல்
9.   நெல்லிக்குப்பம் நகரில் ஒரு மாதிரி இஸ்லாமிய பள்ளி கூடம் அமைக்க பாடுபடுதல்

ஊரில் நம் பிரதிநிதிகள்
நமது அமைப்புக்கு ஊரில் பிரதிநிதிகளாக கீழ்கண்ட நபர்களை நியமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. உறுப்பினர்களின் கருத்தை கேட்டு முடிவு செய்யப்படும்
1.   அஷ்ரப் அலி, TNEB
2.   சிராஜ் STD
3.   ஹுசைன், சின்ன தெரு

வெளிநாட்டு நெல்லிக்குப்பம் அமைப்புகளுக்கு அதிகாரபூர்வ மின்னஞ்சல் அனுப்பவும் ஆலோசிக்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் வரும் மார்ச் 4ம் தேதி அனைவரையும் உள்ளடக்கி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான இடத்தை தலைவர் மன்சூர் முடிவு செய்து பின் மக்களுக்கு அறிவிக்கப்படும். நிகழ்ச்சி நிரலும் வடிவமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment